பொங்கல் வாழ்த்துகள்
*****************************************************************************************************
அன்பு பரவட்டும் அமைதி பெருகட்டும்
ஆன்மீகம் தழைக்கட்டும் ஆலைகள் பெருகட்டும்
இன்பம் மலரட்டும் இயல்புகள்
பெருகட்டும்
ஈகை வளரட்டும் ஈசன்கருனை பெருகட்டும்
உண்மை ஜெயிக்கட்டும் உவகை பெருகட்டும்
ஊரார் வாழட்டும் ஊர்ப்புகழ் பெருகட்டும்
என்றும் மகிழட்டும் எண்ணம் பெருகட்டும்
கிராமம் என்றால் அங்கு வளர்ப்புப் பிராணிகளும், கால்நடைகளும் இருக்கும் என்பதால் மாட்டுப் பொங்கலும் அங்கே சிறப்பாக நடைபெறும். நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிற்கு உள்ளேயே பொங்கல் வைத்துக் கொள்வோம். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் இடவசதி பற்றாக்குறை காரணமாக இது தவிர்க்க முடியாது.
ஆனால் கிராமங்களில் உள்ளவர்கள் தங்களுக்குச் சொந்தமான வயலில் பொங்கல் வைத்து தங்களிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு கொடுத்து மகிழ்வர். ஆனால் இது ஒரு மணி நேரத்தில் முடிகிற விஷயம் அல்ல என்பதால் அன்று முழுவதும் பொங்கல் திருநாளை சிறுவர்கள் அணு அணுவாக ரசிப்போம்... ருசிப்போம்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு நகரவாசிகளைப் போல் ஒருநாள் விடுமுறை எல்லாம் கிராமத்து மக்களுக்கு அளிக்காது. உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்பதால் பொங்கல் பண்டிகைக்கும் கிராமங்களில் விடுமுறை கிடையாது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்.
பொங்கல் பண்டிகையன்று கிராமத்து மக்கள் வழக்கம் போல் காலையிலேயே வயல்களுக்கு சென்று தத்தமது பணிகளை மேற்கொள்வர். அந்தி சாயும் சமயத்தில் பொங்கல் பானை மற்றும் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை ஒருவர் வீட்டில் இருந்து வயலுக்கு எடுத்து வருவார். அதுவரை சிறுவர்கள் வயலில் உள்ள ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு விளையாடியபடி பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்.
போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று வரிசையாக அடுத்தடுத்து வரும் மூன்று பண்டிகை தினங்களுக்கும் தொடர்ந்து திரைப்படங்களை ஒளிபரப்பி மக்களை வீட்டிலேயே முடங்கச் செய்வதற்கான அனைத்து மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. அதிலும், சேனல்களிடையிலான போட்டி வீடுகளிலும் கடும் போட்டியை ஏற்படுத்தி விடுகிறது.
காரணம்... மனைவிக்குப் பிடித்த படம் ஒரு சேனலில் ஓடினால், கணவருக்குப் பிடித்த படம் மற்றொரு சேனலில் ஓடுகிறது. போதாக்குறைக்கு குழந்தைகள் வேறு நடிகர், நடிகையரின் பேட்டியைக் காண ஆவலுடன் காத்திருப்பர். பொங்கல் திருநாளன்று கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறதோ இல்லையோ, வீட்டில் எந்த சேனலை பார்ப்பது என்பதற்காக நிச்சயம் ஜல்லிக்க்கட்டு நடக்கும். கிராமத்து வாழ்க்கையையும் சேட்டிலைட் சேனல்கள் நகரமயமாக்கி விட்டது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட பொங்கல் பண்டிகையை இன்றைய குழந்தைகள் காண்பார்களா அல்லது அனுபவிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏன்? நானே கூட நினைத்தாலும், கிராமத்து மணம் கமழும் பொங்கல் பண்டிகையை பார்ப்பது சிரமம்தான்.
உடல் என்னும் வீட்டில் மனம் தான் அடுப்பு
சிந்தனை பானையை அதில் ஏற்றுவோம்
கடமை என்னும் புத்தரிசி இடுவோம்
பொறாமை, புறம் கூறல், பொய், வஞ்சனை என்னும் நிந்தனைக்குரிய குணங்களைஎல்லாம்அறிவுத் தீயில் விறகாய் எரிப்போம்
வெல்லம் போட மறந்துவிட்டயே என்கிறீர்களா?
மறக்கவில்லை!
பெற்றோர் வாழ்த்து ! பெரியோர் வாழ்த்து என்னும் வெல்லம் இடுவோம்
நமதுடைமை ஆகும் இன்ப பொங்கல்!
நமது உள்ளங்களில் பொங்கட்டும் ஆனந்தப் பொங்கல்!
*****************************************************************************************************

0 comments:
Post a Comment